Showing posts with label Spoof/Sarcasm (Tamil). Show all posts
Showing posts with label Spoof/Sarcasm (Tamil). Show all posts

Thursday, October 17, 2013

சீன திரைப்படத்தில் இருந்து கற்றுக்கொண்டது - கற்றுக்கொடுக்க வேண்டியது

சமீபத்தில் ட்ரு லெஜண்டு (True Legend) என்ற சீன திறைப்படத்தை ஆங்கிலத்தில்  பார்த்தேன். அந்த படத்தின் ஒரு காட்சியில், தாய் தனது குழந்தையுடன் பாடும் ஒரு பாடலின் வரிகள் என் மனதை மிகவும் கவர்ந்தது. அதை தமிழில் மொழி பெயர்த்து என் குழந்தைக்கு சொல்லி தர வேண்டும் என்று தோணியது.

மிகவும் எதார்த்தமான எளிமையான வரிகளாயினும், குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய விருந்தோம்பலை சிறப்பாக உணர்த்துகிறது. ஆங்கில வரிகள் மற்றும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பை இங்கே காணலாம்.

ஆங்கிலம்:
Guests are here to see my parents,
But they aren't home;
So, I ask them to take a seat,
Serve them Tea with Bread.

தமிழ்:
விருந்தினர்கள் வந்துள்ளனர் என் பெற்றோரை சந்திக்க,
ஆனால் அவர்கள் வீட்டில் இல்லை;
நான் அழைத்தேன் வருக வருக என்று,
நான் கொடுத்தேன் முறுக்கும் அதிரசமும்!

பள்ளிகளில், நல்ல பண்புகள் என்று பட்டியலிட்டு அந்த பட்டியலை  குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கின்றனர். அதை விட இந்த பாடல் முறையில் அதே நல்ல பண்புகளை சொல்லி கொடுத்தால் அவர்களது மனதில் எளிதில் பதியும்.

நான் இதை என் வீட்டில் முயற்சி செய்து பார்க்க போகின்றேன். நீங்களும் முயர்ந்து பாருங்கள்.

பின் குறிப்பு: இவ்வளவு அழகான பாடலை விட்டு விட்டு நம் குழந்தைகளுக்கு தொலைகாட்சி மூலம் நாம் சொல்லி தரும் அருவருப்பான  பாடல் இதோ..

"டாடி ம்ம்மி வீட்டில் இல்ல. தடை போட யாரும் இல்ல
விளையாடுவோமா உள்ள விள்ளாள.
மைதானம் தேவ இல்ல, அம்பயரும் தேவை இல்ல
யாருக்கும் தோல்வி இல்ல விள்ளாள.
ஹே..கேளேண்டா மாமு இது இன்டோறு கேம்.
தெரியாம நின்னா அது ரொம்ப சேமு. "


அடுத்த சமுதாயத்தை நமது வீட்டில் இருந்தே சரியாக உருவாக்க உதவுவோம்.

Sunday, August 4, 2013

அரசியலில் குதிக்க இருக்கிறார் BCCI சீனிவாசன்

சும்மா ஒரு பொய் நியூஸ்..
கடந்த சில மாதங்களாக பத்திரிக்கைகளில் தனக்கு என்று ஒரு தனி இடம் பிடித்திருக்கிறார் BCCI'ன் பெரும்காவலர் சீனிவாசன். அவருக்கு இருக்கும் அதிகார ஆசையை கண்டு வியந்த அரசியல் கட்சிகள் அவரை அரசியலுக்கு உடனே வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களது அழைப்பை ஏற்ற சீனிவாசன், தன்னை தானே ஏலத்துக்கு உட்கொண்டுள்ளார்.

பிரபல அரசியல் கட்சிகளின்  வாசலில் சீனிவாசன் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்.....


முன்னணி கட்சிகளான அம்மா ராக்கர்ஸ், அய்யா ராயல்ஸ்   மற்றும் ராகுல் இத்தாலியன்ஸ் இடையே பெரும் போட்டி நிகழ்ந்து வருகிறது. இவர்களில் யார் சீனிவாசனை வெற்றிகரமாக கையில் போட்டுக்கொள்வார்கள் என்பதில் பெட்டிங் நடப்பதாக பரவலான செய்தி. இந்த பெட்டிங்க் சூதாட்டத்தில் அவரது குடும்பத்திற்கு சம்பந்தமில்லாத, அவர் இதுவரை பார்த்திராத அவரது 'மருமகன் Mr.மெய்யப்பன்' சம்பந்தப்பட்டிருப்பதாக செய்தி வந்துள்ளது.

இந்த பெட்டிங் சம்பந்தமான கரையை கலைக்க ஒரு தனி ஆணையம் அமைக்க இருக்கிறார் திரு. சீனிவசான். இந்த ஆணையத்தில், அவர் வீட்டிற்கு கணபதி ஹோமம் செய்ய வரும் பண்டிதர் ஒருவரையும், அவருக்கு கிளி ஜோசியம் பார்க்கும் ஜோசியக்காரர் ஒருவரையும் நியமனம் செய்துள்ளார். இந்த இருவரும் கொடுக்கும் நற்சான்றை பொருத்து தனது ஏலத்தொகை பல மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

விரைவில் தமிழகத்தில் ஒரு புது தலைவர் களமிறங்குவார்.

- பேரில்லாத பத்திரிக்கை

Wednesday, July 31, 2013

கரகாட்டக்காரன் பார்ட் 2 : கனகா மற்றும் ராமராஜன் தீவிர முயற்சி

சும்மா ஒரு பொய் நியூஸ்..
பல ஊடகங்களில் நடிகை கனகா கான்சர் நோயால் வாடிக்கொண்டிருப்பதாக முதலில் வந்த வதந்தி பின்பு அவரை இறக்கவும் வைத்தது. கனகாவிற்கு திடீர் என்று கிடைத்த இந்த பரபரப்பு, மதுரையில் கனகாம்பரம் விற்கும் சங்கத்தினரின் வருமானத்தை தற்காலிகமாக பெருக்கியது. இந்த சம்பவத்தை உன்னிப்பாக  கேரளாவில் இருந்து கவனித்த நடிகை கனகா, அவசர அவசரமாக தனது மேக்-அப் மேன்'ஐ அழைத்து க்ரூமிங் செய்து மாலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது, தான் நலமாக இருப்பதாக தெரிவித்தார். தவிர, நடிகர் ராமராஜர் "அம்மான்னா சும்மாயில்லடா-The Prime Minister" படத்தின்  இறுதிக்கொத்த படப்பிடிப்பில் இருப்பதாக தெரிவித்தார். அந்த வேலை முடிந்தவுடன், "கரகாட்டக்காரன் பார்ட் 2" படப்பிடிப்பு ஆரம்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

அப்பொழுது,  "நான் செத்ததாக போஸ்ட் செய்த போக்கத் தவர்கள், அதனை லைக் செய்த லூசுக்கள் மற்றும் அதனை ஷேர் செய்த சொத்தப்பயல்கள்  அனைவரும் ஆளுக்கு பத்து டிக்கெட் வாங்கி குடுமபத்துடன் படம் பார்க்க வேண்டும்" என்று அன்பு கட்டளை அளித்துள்ளார். இதனை தொடர்ந்து கனகா ரசிகர் மன்றங்கள் பலவும் முகநூளில் புதிதாக திறக்கப்பட்டு உள்ளது. விரைவில் கனகா ராமராஜன் ஜோடி ஒரு ஆட்டம் ஆடும்.

- பேரில்லாத பத்திரிக்கை

கரகாட்டகாரன்