Tuesday, August 6, 2013

தன் ஜாதிக்கு தனி நாடு உரிமை வழங்க கோரிக்கை

சும்மா ஒரு பொய் நியூஸ்..

தமிழகத்தின் புது விடியலாகவும், அழிந்து வரும் ஜாதிக்கட்சி அரசியலை புணரமைக்கும் சிர்ப்பியாகவும்; தமிழக மக்களிடையே பல அறிவார்ந்த தத்துவங்களை அள்ளி வீசும் அறிவு ஜீவியாகவும் நம்மிடையே வித்தியாசமானவராக வளம் வருபவரே இவர். அரசியலில் போதுமான வருமானம் இல்லாததால் கல்யாண தரகராகவும், திருமண வயதை நிர்ணயிக்கும் ஜோசியராகவும் மாறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்தவர் இன்று திடீர் என்று அமெரிக்காவிற்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கை பற்றிய விவரங்களை இன்று காலை நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் விளக்கினார். கூட்டத்தில் பங்கேற்கும் பத்திரிக்கயாலர்கலுக்கு ஒரு காபி மற்றும் போண்டா கொடுக்கப்படும் என்ற நப்பாசையில், நமது  பேரில்லாத பத்திரிக்கை நிருபர் ஒருவர் கலந்து கொண்டார். அவர் உயிர் மீண்டு வந்து கொடுத்த ரிப்போர்ட் உங்களுக்காக....

தன் ஜாதிக்கும், தன்னை போன்ற ஜாதியை எதிர்க்கும் போராளிகளுக்கும் இந்திய தேசத்தின் அங்கமான தமிழகம், போதிய பாதுகாப்பு தர மறந்துவிட்டது. சும்மா சும்மா தன்னை ஊருக்குள் என்ட்ரி செய்ய கூடாது என்றும் அரெஸ்ட் செய்துவிடுவேன் என்றும் தமிழக அரசு மிரட்டுவதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

தவிர, தான் எது பேசினாலும் தன்னை அறிவுஜீவி என்று வஞ்சப்புகழ்ச்சி அணியில் கூப்பிடுவதை அவர் இனியும் பொருக்க முடியாது என்று கடுமையாக சாடியுள்ளார்.

சாதி ஒழிப்புக்காக அவர் தருமபுரியில் செய்த போராட்டங்களை தமிழகம் தவறாக புரிந்துகொண்டதாக விளக்கம் அளித்துள்ளார். சாதியை ஒழிக்க ஒற்றுமை பேணுவதை விட பிற ஜாதிகளை கொன்று குவிப்பதே சிறந்த முறை என்று அடிக்கோடு இட்டு காட்டியுள்ளார். மேலும் பல சாதியுள்ள இந்திய தேசத்தில் வாழ பிடிக்கவில்லை என்றும், தனக்கு என்று ஒரு நாடு உருவாக்கி அதில் வாழ விரும்புவதாக கூறியுள்ளார். இதனை ஏற்று அமெரிக்க சட்ட சபை தனக்கு ஒரு நாடு வாங்கி கொடுக்கும் என்று உறுதியோடு இருப்பதாக செய்தியாளர்களிடையே கூறினார்.

உள்ளூரில் இதை சொன்னால் தன்னை மீண்டும் அறிவுஜீவி என்று கேலி செய்வார்கள் என்பதால் அமெரிக்காவின் உதவியை நாடியிருப்பதாக கூறியுள்ளார்.

பின் குறிப்பு: அவர் எழுதிய கோரிக்கை கடிதத்தை ஒபாமாவிற்கு போஸ்ட் செய்ய கூட தொண்டர்கள் இல்லையாம். தனது ஒரே தொண்டனான மகன் அதனை போஸ்ட் செய்ய சென்றுள்ளதால் செய்தியாளர்கள் கூட்டத்திற்கு  வர முடியவில்லையாம்.

No comments: