Monday, April 14, 2014

எனது ஒட்டு ஆம் ஆத்மி கட்சிக்கே...

நண்பர் திரு வா.மணிகண்டன் அவர்கள் மோடி அவர்களால் நிலையான அரசு கொடுக்க முடியும் என்ற கருத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவருடைய கட்டுரையை படித்த பிறகு தோன்றியவை..

நிலையான அரசு தான் வேண்டும் என்றால் காங்கிரசை கூட ஆதரிக்கலாம். அவர்கள் கூட கடந்த பத்து வருசமும் சீட்டை தேய்ச்சார்கள். வளரும் நாடு என்ற நம்பிக்கை போய், வளருமா என்ற சந்தேகமே மிஞ்சுகிறது.

மோடி சூரப்புலியாக இருந்தாலும், அவரை வளர்க்கும் கட்சியோ பழமைவாதிகளின் சங்கம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு பழசு. இவர்கள் இது வரை செய்தது என்ன என்பதை சுவிஸ் பாங்கிடமும், இந்தியாவின் பெரும் பண முதலைகளிடமும், முஸ்லிம் சகோதரர்களிடமும் மட்டுமே கேட்டறிய முடியும்.

தமிழகத்தின் விதி அய்யாவிடமும் அம்மாவிடமும் மாட்டிக்கொன்டதை போல், இந்தியாவின் விதி பி.ஜே.பி மற்றும் காங்கிரஸிடம் மாட்டிக்கொள்ளவேண்டுமா?

எதிர்காலத்தில், நமக்கு இவர்கள் அற்ற ஒரு மாற்று தலைமை வேண்டும். அந்த மாற்றத்தின் ஆரம்பமாக நான் ஆம் ஆத்மி கட்சியை பார்க்கின்றேன். இவர்கள் ஆட்சிக்கு வந்தால், உடனே லஞ்ச ஊழல் அகன்று விடும், இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று சொல்லவில்லை. இதற்க்கான ஆரம்பம் கட்டாயம் வரும். தகுதி உடையவர்கள், அரசியலில் ஈடுபட முன்வருவார்கள், லஞ்சம் வாங்கும் ஒவ்வொருவருக்கும் மக்கள் மீதான பயம் வரும். வளர்ச்சி திட்டங்கள் பண முதலைகளுக்கு மட்டுமே வளர்ச்சியை தராமல் மக்களுக்கும் வளர்ச்சி தரும் என்று நம்புகின்றேன்.

எனது ஒட்டு ஆம் ஆத்மி கட்சிக்கே...

பி.கு: இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் இங்கு என்னை திட்டுவீர்கள். திருத்துகிறேன் என்று அறிவுரை கூறுவீர்கள். நேரமின்மையால் என்னால் பதில் அளிக்க முடியாது என்று தாழ்மையுடன் தெரிவித்துக்கொல்கின்றேன்.

No comments: