Monday, January 14, 2013

தை மகளே வருக வருக!

சின்ன வயசில் சைக்கிளை எடுத்துக்கிட்டு ஊரை சுத்தினால் ஊர் சுத்தின்னு அம்மா திட்டுவாள். இருந்தாலும் எங்காவது சுத்துவது வழக்கம். அந்த பழக்கம் தான்  இன்று வரை விட்டு போகவில்லை.

பொங்கல் நாளான இன்று சைக்கிள் எடுத்துக்கொண்டு ஊர் சுற்றினேன். பார்த்து ரசித்தவைகளை உங்களுக்காக கிளிக் செய்துள்ளேன்.

1) சூரியனை வணங்கும் இந்நாளில் முளைத்த புதிய சூரியன்.அந்த சூரியனை மறைக்க பிறந்திருக்கும் புது கட்டிடம்.


2) நங்கனல்லூரில் ஒரு கோவில். ஆங்கிலத்தில் தமிழனை வாழ்த்தும் தமிழ் கடவுள்.


 3) கோலமிடுவதை Outsource செய்த சென்னைவாசிகள். எனவே, இரு சிறுமிகளின் இன்றைய மூன்றாவது கோலம் இது.

அருமையாக கோலமிடும் இந்த கோலமயில்களுக்கு புகைப்படம் என்றதும் வெக்கம் வந்தது, தலை தரையை பார்த்தது . அவர்களின் கோலம் மட்டும் மலர்ந்தது வானை பார்த்தது.

 4) ஒரு அழகான அபார்ட்மெண்ட் வாசலில் வரையப்பட்ட அழகு கோலம்.


5) இந்த பதிவுக்கு தலைப்பை கொடுத்த தமிழ் கோலம்.


6) இன்னொரு தமிழ் கோலம். கோலமிட்ட தாய் குளித்து தயாராகிவிட்டாள்; பொங்கல் இட. கோலமே இவ்வளவு அழகாக இருக்கையில் பொங்கல்...அம்மா கொஞ்சம் பொங்கல் கிடைக்குமா என்று கேட்கத்தோணியது.  


 7) விதவிதமாக வரைந்து என்னை கிளிக் செய்ய உசுப்பேத்திய முதல் கோலம் இதுவே.


 8) கிழக்கே உதித்த சூரியன் உயரே செல்ல  இருக்கிறான். எங்களையும் அழைத்து செல், உயரத்தை காட்டு.

No comments: