Thursday, October 17, 2013

சீன திரைப்படத்தில் இருந்து கற்றுக்கொண்டது - கற்றுக்கொடுக்க வேண்டியது

சமீபத்தில் ட்ரு லெஜண்டு (True Legend) என்ற சீன திறைப்படத்தை ஆங்கிலத்தில்  பார்த்தேன். அந்த படத்தின் ஒரு காட்சியில், தாய் தனது குழந்தையுடன் பாடும் ஒரு பாடலின் வரிகள் என் மனதை மிகவும் கவர்ந்தது. அதை தமிழில் மொழி பெயர்த்து என் குழந்தைக்கு சொல்லி தர வேண்டும் என்று தோணியது.

மிகவும் எதார்த்தமான எளிமையான வரிகளாயினும், குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய விருந்தோம்பலை சிறப்பாக உணர்த்துகிறது. ஆங்கில வரிகள் மற்றும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பை இங்கே காணலாம்.

ஆங்கிலம்:
Guests are here to see my parents,
But they aren't home;
So, I ask them to take a seat,
Serve them Tea with Bread.

தமிழ்:
விருந்தினர்கள் வந்துள்ளனர் என் பெற்றோரை சந்திக்க,
ஆனால் அவர்கள் வீட்டில் இல்லை;
நான் அழைத்தேன் வருக வருக என்று,
நான் கொடுத்தேன் முறுக்கும் அதிரசமும்!

பள்ளிகளில், நல்ல பண்புகள் என்று பட்டியலிட்டு அந்த பட்டியலை  குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கின்றனர். அதை விட இந்த பாடல் முறையில் அதே நல்ல பண்புகளை சொல்லி கொடுத்தால் அவர்களது மனதில் எளிதில் பதியும்.

நான் இதை என் வீட்டில் முயற்சி செய்து பார்க்க போகின்றேன். நீங்களும் முயர்ந்து பாருங்கள்.

பின் குறிப்பு: இவ்வளவு அழகான பாடலை விட்டு விட்டு நம் குழந்தைகளுக்கு தொலைகாட்சி மூலம் நாம் சொல்லி தரும் அருவருப்பான  பாடல் இதோ..

"டாடி ம்ம்மி வீட்டில் இல்ல. தடை போட யாரும் இல்ல
விளையாடுவோமா உள்ள விள்ளாள.
மைதானம் தேவ இல்ல, அம்பயரும் தேவை இல்ல
யாருக்கும் தோல்வி இல்ல விள்ளாள.
ஹே..கேளேண்டா மாமு இது இன்டோறு கேம்.
தெரியாம நின்னா அது ரொம்ப சேமு. "


அடுத்த சமுதாயத்தை நமது வீட்டில் இருந்தே சரியாக உருவாக்க உதவுவோம்.

No comments: